சின்னமுட்டம் புனித தோமையார் ஆலயத்தில் சப்பர பவனி

திரளான மக்கள் பங்கேற்புஇந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித தோமையார் ஆலய 9-ம் திருவிழாவையொட்டி நேற்று இரவு சப்பரபவனி நடந்த போது எடுத்த படம்.
புனித தோமையார் ஆலய 9-ம் திருவிழாவையொட்டி நேற்று இரவு சப்பரபவனி நடந்த போது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழாகடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றிவைத்தார்.

திருவிழா வை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷமாலைஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.9-ம் திருவிழாவான நேற்றுகாலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிக ளுக்கான திருப்பலிநடந்தது.

புதுக்கிராமம் பங்கு அருட்பணியாளர் மைக்கேல் நியூமன் தலைமையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார். மாலை6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடந்தது.காரங்காடு பங்கு அருட்பணியாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்டணம்பங்கு அருட்பணியாளர் பபியான்ஸ் அருளுரை ஆற்றினார்.

இரவு 9 மணிக்கு புனித தோமையார் சொரூ பத்துடன் சப்பரப்பவனி தொடங்கியது. நள்ளிரவு வரை வீதி, வீதியாக இந்த சப்பரபவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார்.

காலை 7.30மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணி யாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞானபிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ்அருளுரை ஆற்றினார்.

காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.இதில்சின்ன முட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்குஅருட்பணி பேரவை துணைத்த லைவர்அ ந்தோணி செப ஸ்தியான், செயலாளர்தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லி ன்மற்றும் பங்குஅருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள்கலந்து கொண்டனர்.

மாலை 6 மணிக்கு திருக்கொடிஇறக்கம்மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர், பங்கு அருட்பணிபேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com