கொட்டாரம் அருகே தடுப்புச்சுவர் மீது மோதிய கார் - டிரைவர் படுகாயம்

அதே வேகத்தில் ரோட்டோரமாக இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதியதுகாரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
கொட்டாரம் அருகே தடுப்புச்சுவர் மீது மோதிய கார் - டிரைவர் படுகாயம்
Published on

கன்னியாகுமரி :

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கி (வயது 34). இவர் இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.

கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரம்பகுதி யில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தாறு மாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோரமாக இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் டிரைவர் ராக்கி படுகாயம் அடைந் தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளத் தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் தென்தாமரை குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com