கன்னியாகுமரியில் கடலில் மிதந்த பெண் உடல் - யார் அவர்? போலீசார் விசாரணை

கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? யாராவது கொலை செய்து கடலில் பிணத்தை வீசினார்களா?
கன்னியாகுமரியில் கடலில் மிதந்த பெண் உடல் - யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணம் மிதந்தது. அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் கடலில் குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது இருந்து கடல் அலையில் இழுத்து வரப்பட்டாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கடலில் பிணத்தை வீசினார்களா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com