ஆரல்வாய்மொழி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

நேற்று இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார்.ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com