

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 26-ந் தேதி விழா தொடங்கியது. 6-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவும், இரவு மெல்லிசைக் கச்சேரியும் நடந்தது.
அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாட லுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவ டைந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர் அரிகிருஷ்ணபெருமாள், துணை செயலாளர் ஓம்நமச்சிவாயா, கொட்டா ரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாரா தனையும் நடந்தது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்தனக் காப்பு அலங்கா ரத்துடன் தீபாராத னையும் நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. மாலையில் சாய ரட்சை தீபாரா தனையும், இரவு பக்தி பஜனையும், வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.