இரணியல் அருகே நெய்யூர் தபால் நிலையத்தில் துணிகர கொள்ளை

லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததுகாமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இரணியல் அருகே நெய்யூர் தபால் நிலையத்தில் துணிகர கொள்ளை
Published on

கன்னியாகுமரி ;

இரணியல் அருகே நெய்யூர் தபால் அலுவலகம் உள்ளது. இதனை நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இங்கு போஸ்ட் மாஸ்டராக கனகபாய் பணி புரிகிறார்.

இன்று காலை தபால் அலுவலகம் திறக்க வந்த போது முன் பக்கத்தில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உயர் அதிகாரிகளுக்கும் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அலுவலக செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. தபால் அலுவலகத்தில் சி.சி.டி.வி.காமிரா பொருத்தபட வில்லை. மேலும் அப்பகுதி யில் உள்ள காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com