டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறிக்க முயற்சி

தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறிக்க முயற்சி
Published on

நாகர்கோவில், ஜூலை.10-

குளச்சல் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வை யாளராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நடேசன் தலைமை யில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குளச்சல் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வை யாளர் கோபாலகிருஷ்ணன் பணி முடிந்து வீடு செல்லும் வழியில் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கைகள் வெட்டப்பட்டு விரல் துண்டிக்கப்பட்டது. தலையி லும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. எனவே கோபாலகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) மாவட்ட தலைவர் மரிய செல்வன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், குளச்சல் மதுக்கடை மேற்பார்வையாளர் கோபால கிருஷ்ணனை தாக்கிய மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com