மார்த்தாண்டம் அருகே வங்கி ஊழியர் மீது தாக்குதல்

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார்போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
மார்த்தாண்டம் அருகே வங்கி ஊழியர் மீது தாக்குதல்
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் கல்லுக்கூட்டம் நடுவத்துவிளையை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷஜூ (வயது37).

இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று ஷஜூ மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் புல்லாணி சந்திப்பில் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது அந்த பகுதியில் தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த ஆன்றோ மற்றும் இருவர் சேர்ந்து ஷஜூவிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதை தடுத்த அவரது நண்பர் ராஜேசும் தாக்கப்பட்டார். இதுகுறித்து ஷஜூ மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com