பத்மநாபபுரத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 45 குரங்குகள் சிக்கியது

வன ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப் பகுதிக்கு கொண்டு விட்டனர்.
பிடிபட்ட குரங்குகளை வன ஊழியர்கள் காட்டு பகுதியில் விட கொண்டு சென்ற காட்சி.
பிடிபட்ட குரங்குகளை வன ஊழியர்கள் காட்டு பகுதியில் விட கொண்டு சென்ற காட்சி.
Published on

நாகர்கோவில்:

பத்நாபபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறை ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

வேளிமலை வன சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.பின்னர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த கூண்டில் ஒரே நேரத்தில் 45 குரங்குகள் சிக்கியது. நேற்று ஒரே நாளில் 45 குரங்குகள் சிக்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து பிடிபட்ட குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப்பகுதிக்கு கொண்டு விட்டனர். 45 குரங்குகள் ஒரே இடத்தில் பிடிபட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com