குளச்சலில் நெத்திலி மீன் சீசன் ஆரம்பம்

தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம்பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளச்சலில் நெத்திலி மீன் சீசன் ஆரம்பம்
Published on

கன்னியாகுமரி:

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் களை கட்ட தொடங்கியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய பைபர் படகுகளில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்ட நிலையில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் தற்போது குளச்சல், முட்டம் மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2000-க்கும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய நிலையில் அவர்களது படகில் அதிக அளவில் நெத்திலி மீன்கள் பிடிபட்டிருந்தது. இதை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com