வடசேரி அருகே தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி

பேண்ட் வாத்திய இசைக்குழுவில் இவர் வேலை பார்த்து வந்தார்சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வடசேரி அருகே தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் பார்வதிபுரம் இலந்தையடி பகுதியை சேர்ந்தவர் பால்தாஸ் (வயது 75). பேண்ட் வாத்திய இசைக்குழுவில் இவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பால்தாஸ் இலந்தையடி பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது அமர்ந்திருந்தார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பால்தாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்தாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் ரமேஷ் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com