வெள்ளிச்சந்தை அருகே தூக்குபோட்டு முதியவர் தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளிஇவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்
வெள்ளிச்சந்தை அருகே தூக்குபோட்டு முதியவர் தற்கொலை
Published on

நாகர்கோவில் : வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 64), கூலி தொழிலாளி. இவருக்கு கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. எனினும் சரியாக அதிலிருந்து குணமாகாத தால் மனம் உடைந்த அற்புதராஜ், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள பூவரசு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.

இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக வெள்ளிச்சந்தை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இவருக்கு கோமளா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அதில் ஒரு மக னுக்கு திருமணம் ஆகி விட்டது. சம்பவம் குறித்து கோமளா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச் சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜின் உடலை கைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com