மண்டைக்காடு அருகே மொபட்டில் சென்ற பெண்ணின் 13 பவுன் நகை பறிக்க முயற்சி - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

வீட்டுக்கு பொருட்கள் வாங்க தனது மகளுடன் மொபட்டில் சேரமங்கலம் சென்றார். ஜெனிதா தாலி செயினை இறுக்கப்பிடித்து கொண்டு சப்தமிட்டார்.
மண்டைக்காடு அருகே மொபட்டில் சென்ற பெண்ணின் 13 பவுன் நகை பறிக்க முயற்சி - மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
Published on

கன்னியாகுமரி :

மண்டைக்காடு அருகே சேரமங்கலம் கண்ணிவிளையை சேர்ந்த வர் ஜெயசிங் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெனிதா (45). நேற்று மதியம் இவர் வீட்டுக்கு பொருட்கள் வாங்க தனது மகளுடன் மொபட்டில் சேரமங்கலம் சென்றார். பின்னால் மகள் அமர்ந்திருந்தாள். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டருகே செல்லும்போது பிள்ளையார்கோயில் - திங்கள்நகர் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்ம நபர்கள் திடீரென ஜெனிதாவின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க தாலியை பறித்தனர். உடனே சுதாரித்து க்கொண்ட ஜெனிதா தாலி செயினை இறுக்கப்பிடித்து கொண்டு சப்தமிட்டார். மர்ம நபர்களின் கையில் செயின் சிக்காததால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் ஜெனிதா, மகள் இருவரும் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் அதிர்ஷ்ட வசமாக இருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து ஜெனிதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com