சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது
சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Published on

என்.ஜி.ஓ.காலனி :

சுசீந்திரம் அருகே பறக்கை சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம் (வயது 31), கொத்த னார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ரோகித் (5), பாலரெஜின் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.

பின்னர் சரண்யா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுயம்புலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். சரண்யா வுக்கு தோழிகள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com