குளச்சலில் டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கோபால கிருஷ்ணன் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
குளச்சலில் டாஸ்மாக் ஊழியரை வெட்டி பணம் பறித்த வாலிபர் கைது
Published on

கன்னியாகுமரி :

குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53), டாஸ்மாக் ஊழியர். இவர் கடந்த 8-ந் தேதி இரவு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு பணத்துடன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே சென்ற போது இருளில் பதுங்கியி ருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கோபால கிருஷ்ணன் மீது பாய்ந்து அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.

ஆனால் கோபால கிருஷ்ணன் அவனுடன் போராடியதால் வசூல் பணம் ரூ.6.55 லட்சம் தப்பியது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடையதாக மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருள் சஜு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்ப டுத்தப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com