கோட்டாரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு சேர்ந்த சிவசங்கர் என்பவரை கைது செய்தனர்சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கோட்டாரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோட்டார் பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீச்ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் (வயது 39) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசங்கர் ஜெயில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது ஏற்கனவே நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதையடுத்து சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் சிவசங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசங்கர் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com