நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீர் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாதுகலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீர் தர்ணா
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பெய்த மழையையும் பொருட் படுத்தாமல் தரையில் அமர்ந்து கோஷமிட்டார். உடனே கலெக்டர் அலுவ லகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட அவரை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீ சாரிடம் அந்த வாலிபர் கூறியதாவது:-

எனது பெயர் ரமேஷ் (வயது 31). எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு சகோதரர்கள் உண்டு. நான் பிறந்ததில் இருந்து எங்களது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் எனது உறவினர்கள் சிலர் என்னை வீட்டை விட்டு துரத்தி வெளியேற்றினர். இதனால் கடந்த 2 நாட்களாக வீடு இன்றி பொது இடங்களில் ஓய்வெடுத்து வருகிறேன். மேலும் எனது வீட்டை முழுமையாக அபகரிக்க முயல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் ரமேசிடம், "கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களது புகாரை மனுவாக கலெக்டர் அலுவல கத்தில் அளிக்க வேண்டும்" என்றனர். இதையடுத்து ரமேஷ் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வீடு திரும்பினார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com