திங்கள்நகர் அருகே உரக்கடையில் துணிகர கொள்ளை

சுமார் ரூ.23 ஆயிரம் மற்றும் இணையதள மோடம் காணாமல் போனதுபலசரக்கு கடை பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது
திங்கள்நகர் அருகே உரக்கடையில் துணிகர கொள்ளை
Published on

கன்னியாகுமரி :

இரணியல்அருகே தலக்குளம் சாலையில் பூங்கா எதிரில் உரக்கடை மற்றும் மாடித்தோட்டம் கடை நடத்தி வருபவர் ஶ்ரீதர் (வயது 48). இவர் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு இன்று காலை சுமார் 8 மணிக்கு கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.23 ஆயிரம் மற்றும் இணையதள மோடம் காணாமல் போனது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜ் என்பவர் பலசரக்கு கடை பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com