மார்த்தாண்டம் அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தார்

தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? போலீசார் விசாரணைஉடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கான்வென்ட் ஆக்கி விளையை சேர்ந்தவர் மார்க்கோஸ் (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்து உள்ளார்.

நேற்று மார்க்கோஸ், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று உள்ளார். வெகு நேரமா கியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றனர்.

அப்போது ஆற்றின் கரை யோரம் அவரது துணிகள் கிடந்துள்ளன. தொடர்ந்து தேடியபோது ஆற்றின் கரையோரம் மார்க்கோஸ் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக மார்த்தா ண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மார்க்கோஸ் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com