வள்ளியூர் அருகே ஓட்டல் உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுகணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை
வள்ளியூர் அருகே ஓட்டல் உரிமையாளர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
Published on

நாகர்கோவில் :

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் ஏர்வாடி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இன்று காலை இவர் வள்ளியூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com