மார்த்தாண்டம் அருகே மீன் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

அவர் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் நந்தன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. செல்வம் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி கலா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com