பூதப்பாண்டி அருகே தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் யானை

20 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததுஇறந்த யானையை உடல் கூறு ஆய்வுக்கு பின் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பூதப்பாண்டி அருகே தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் யானை
Published on

நாகர்கோவில் :

பூதப்பாண்டி அருகே வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. விளைநிலங்க ளுக்குள் புகுந்து யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்டகாசம் செய்தது.

இந்த நிலையில் அழகிய பாண்டியபுரம் வன சரகம் அசம்புபீட் தூவச்சிசராகம் இஞ்சிக்கடவு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்த மான தோட்டத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்த யானை 40 வயது உடைய பெண் யானை என்பது தெரியவந்தது.

இறந்த யானை சுமார் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கீழே உள்ள பள்ளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கியபோது தவறி விழுந்ததா? மழை பெய்து வந்த நிலையில் யானை வழுக்கி விழுந்து இறந்ததா? என்பது தெரியவில்லை.

இறந்த யானையை உடல் கூறு ஆய்வுக்கு பின் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

கால்நடை மருத்துவர்கள் வன பணியாளர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு யானை அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com