சுசீந்திரம் அருகே தென்னை மரம் முறிந்து தீ விபத்து

மின்சாரம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதுதீயணைப்பு துறையினர் தீயை விரைந்து பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
சுசீந்திரம் அருகே தென்னை மரம் முறிந்து தீ விபத்து
Published on

நாகர்கோவில் :

சுசீந்திரம் ஆனைபாலம் அருகே லாரவிளை சாலையோரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து மின் வயர் மீது பட்டு சாலையில் விழுந்தது.

இதனால் திடீரென தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அந்த வழியாக வந்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் முகமது சலீம் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com