இரணியல் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

மின்விசிறியில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கன்னியாகுமரி :

இரணியல் அருகே புதுவிளை சானல் கரையில் சேர்ந்தவர் டேவிட் ராஜ் (வயது 45). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு மகன் தீபக் (14) அருகே உள்ள ஒரு கோவில் திருவிழா பார்க்க வேண்டும் என்று தனது தாயிடம் கூறியதாகவும், ஆனால் தாயார் போக வேண்டாம் என்று கூறியதாக கூறப்படு கிறது.

இதனையடுத்து தீபக் அறையில் சென்று உள்பக்கம் கதவை பூட்டி விட்டார். சிறிது நேரம் கழித்து தாயார் கதவை திறக்க முயன்றபோது திறக்க முடியாது சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று கூறினர்.

இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com