நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 10,24,949 பேர் வாக்களிக்கிறார்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 10,24,949 பேர் வாக்களிக்கிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் அரவிந்த் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும், 4 நகராட்சியில் உள்ள 99 வார்டுகளுக்கும், 51 பேரூராட்சியில் உள்ள 828 வார்டுகளுக்கு என மொத்தம் 979 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.

நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்தமட்டில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 531 பேர் வாக்களிக்க உள்ளனர்.

குளச்சல் நகராட்சியில் 11,450 ஆண் வாக்காளர்களும், 11,368 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 22,821 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கொல்லங்கோடு நகராட்சியில் 25,303 ஆண் வாக்காளர்களும், 25,576 பெண் வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்கள்  என மொத்தம் 50,883 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

குழித்துறை நகராட்சியில் 8,659 ஆண் வாக்காளர்களும், 9,426 பெண் வாக்காளர்களும், ஒரு இதர வாக்காளர் என மொத்தம் 18,066 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பத்மநாபபுரம் நகராட்சியில் 8,372 ஆண் வாக்காளர்களும், 8,587 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 2 பேர் என மொத்தம் 16,961 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 4 நகராட்சிகளிலும் 53,764 ஆண் வாக்காளர்களும், 54,957 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 10 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 731 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

51 பேரூராட்சிகளிலும் 3 லட்சத்து 35 ஆயிரத்து 832 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 812 பெண் வாக்காளர்களும், 43 இதர வாக்காளர்கள் என மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 687 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தத்தில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 266 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 14 ஆயிரத்து 619 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 64 பேர் என மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

இதற்காக மாநகராட்சி பகுதியில் 233 வாக்குச்சாவடி யிலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 140 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் 951 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1324 வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 192 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும்போது 2 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். பொது இடங்களில் மேடை அமைத்து பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபங்கள், ஆடிட்டோரியம் தேர்தல் பிரச்சாரத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக் கப்படுவார்கள்.

சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசாரிடம் தடையில்லா சான்று பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதி பெற்ற பிறகே கூட்டங்கள் நடத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com