புரட்டாசி திருவாதிரையையொட்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

திரளான பக்தர்கள் பங்கேற்புவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
கோவிலில் 1008 சங்குகளை சிவலிங்க வடிவில் வடிவமைத்து சங்கு பூஜை நடந்தபோது எடுத்த படம் 
கோவிலில் 1008 சங்குகளை சிவலிங்க வடிவில் வடிவமைத்து சங்கு பூஜை நடந்தபோது எடுத்த படம் 
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான இன்று காலை 1008 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி காலை கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

பின்னர் தொடர்ந்து சங்குபூஜை நடந்தது. அப்போது சிவபெருமானின் பஞ்சலோக முக கவசம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் முன்னால் நெல் மற்றும் மலர்கள் பரப்பி அதன் மேலே 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவில் வடிவமைத்து இருந்தது. அந்த சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை நடத்தப்பட்டது.

கோவில் தலைமை அர்ச்சகர் ராஜாமணி அய்யர் மற்றும் சிவாச்சாரியர்கள் இந்த சங்கு பூஜையை நடத்தினர். பின்னர் குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜபெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com