பொருள் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

இரணியல் அருகே பொருள் வாங்குவது போல் நடித்து மர்ம நபர்கள் பெண்ணிடம் நகையை பறித்து சென்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நாகர்கோவில்:

இரணியல் அருகே தலக்குளம் புதுவிளையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ராஜேஸ் வரி (வயது61). வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவர் கடையில் இருக் கும் போது ஹெல்மெட் அணிந்த இருவர் பைக்கில் வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்க மற்றொருவர் ராஜேஸ்வரியிடம் சிகரெட் கேட்டுள்ளார். இதையடுத்து அவர் சிகரெட்டை எடுத்து கொடுத்துள்ளார்.

அப்போது சட்டென அந்த மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துள்ளார். இதனால் பதறிப்போன ராஜேஸ்வரி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். 

அதற்குள் அந்த இரு மர்ம நபர்களும் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர். இதுகுறித்து ராஜேஸ்வரி இரணியல் போலீசில் புகாரளித்தார். 

புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சமீப காலமாக இரணியல் பகுதிகளில் பெருகிவரும் நகை பறிப்பு சம்பவங்கள் இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com