அனுமதி இன்றி செம்மண் கடத்திய டெம்போ-பொக்லைன் எந்திரம் பறிமுதல்

மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைசெம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com