ராஜாக்கமங்கலம் அருகே ரூ.10 லட்சம் செலவில் சாலை செப்பனிடும் பணி

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்மத்திய நிதி குழு மானியத்தில் அமைக்கப்படுகிறது
சாலை செப்பனிடும் பணியை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம் 
சாலை செப்பனிடும் பணியை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம் 
Published on

கன்னியாகுமரி:

ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அம்மச்சியார் கோவில் வில்லிவிளை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதனை ரூ.10 லட்சம் செலவில் தார் சாலையாக அமைக்கும் பணியினை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மத்திய நிதி குழு மானியத்தில் அமைக் கப்படும் சாலை செப்பனிடும் நிகழ்ச்சிக்கு ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்லத்துரை அம்மச்சியார் கோவில் ஊர் தலைவர் சிவதாணுலிங்கம், வில்லிவிளை ஊர் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், ஒன்றிய செயற்பொறியாளர் சுசிலா ஜெயக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவமணிகண்டன், ராமச் சந்திரன், காமராஜ் சுபின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com