ஆசாரிபள்ளத்தில் தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமான இளம்பெண் மீட்பு

பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்திருமணத்திற்கு பிறகு அபிஷா வில்லுக்குறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அருகே மேல பெரு விளையை சேர்ந்தவர் அபிஷா (வயது 21).

இவருக்கும் கீழப்பெரு விளையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந்தேதி திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு அபிஷா வில்லுக்குறியில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்று வந்தார்.இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அபிஷா கணவர் வீட்டில் இருந்து தாயார் வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் அபிஷாவின் வீட்டில் யாரும் இல்லை.அவர் மட்டும் தனியாக இருந்தார். பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது அபிஷாவை காண வில்லை. அவர் தாலிச் சங்கிலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி னார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அபிஷாவின் தாயார் சந்திரா ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அபிஷா மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அபிஷாவை மீட்டனர். பின்னர் அவரை ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி னார்கள். அப்போது அவர் கணவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அபிஷாவை சமாதானம் செய்து அவரது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com