கன்னியாகுமரி பகுதியில்12 சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திரளான பக்தர்கள் பங்கேற்புபக்தர்களுக்கு 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
குகநாதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
குகநாதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சா மிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம்ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜா மணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமா னுக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர் கள் பேரவையினர் செய்து இருந்தனர். இதே போல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகா னந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசா லாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன் பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் மார்கழி மாத பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் திருக்கோ வில் உள்ளது.

இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்குநந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாரா தனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com