மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் 15-ந்தேதி மின்தடை

மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது.பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை, தடிக்காரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் ஆகிய உபமின் நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ்.ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், பூதப்பாண்டி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையார்விளை, காரவிளை, வைராகுடி, திட்டுவிளை, சீதப்பால், தோவாளை, நாவல்காடு, வெள்ளமடம், பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்த நாடார்குடி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த நேரத்தில் மின்பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com