கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை

மேயர் மகேஷ் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கினார்அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சி நடந்தது.
மேயர் மகேஷ் பக்தர்களுக்கு நெற்கதிர்களை பிரசாதமாக வழங்கியபோது எடுத்த படம் 
மேயர் மகேஷ் பக்தர்களுக்கு நெற்கதிர்களை பிரசாதமாக வழங்கியபோது எடுத்த படம் 
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை மாதங்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை நிறைபுத்தரிசி பூஜை இன்றுஅதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது.

இதையொட்டி இன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சிநடந்தது.பின்னர் பகவதி அம்மன்கோவிலில் மூலஸ்தானமண்டபத்தில் நெற்கதிர் கட்டுகளை வைத்து கோவில் மேல் சாந்தி சீனிவாசன் போற்றி பூஜைகள் நடத்தினார். அதன் பின்னர் பகவதி அம்மன் முன்பு நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர்அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட் டது.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெற்க திர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.

நிறை புத்தரிசி பூஜை வழி பாட்டுடன் கோவி லில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடந்தது.மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது. நிறை புத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com