திருவட்டார் அருகே பால் வெட்டும் தொழிலாளி தற்கொலை

உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைப்பு திருவட்டார் போலீசார் விசாரணை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே பனங்கால விளை, மல விளை, பகுதியை சேர்ந்த வர் ஜெஸ்டின் ஜெயக் குமார் (வயது 42), பால் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவருக்கு கவிதா (40) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 7 வகுப்பும், 5 வகுப்பும் படித்து வருகிறார் கள்.

ஜெஸ்டின் ஜெயகுமா ரின் தந்தை கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயினால் நடக்க முடி யாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஜெஸ்டின் ஜெயகுமார் மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இவரது மனைவி கவிதா குலசேகரம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று இருந்தார். திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

உடனே அக்கம்பக்கத்தி னர் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் கயிற்றி னால் தூக்கில் தொங்கியதை பார்த்து கவிதா அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டின் அருகில் உள்ளவர்கள் உதவி யுடன் கீழே இறக்கி பார்க்கும் போது இறந்தது தெரிய வந்தது. இதுபற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்கு பதிவு செய்து ஜெஸ்டின் ஜெயகுமார் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத் தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com