ஆரல்வாய்மொழியில் கொத்தனார் தற்கொலை

ஆரல்வாய்மொழி 4 வழி சாலையையொட்டியுள்ள மரத்தில் பிணமாக தொங்கினார்.தற்கொலை செய்து கொண்டவருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

ஆரல்வாய்மொழி 4 வழி சாலையையொட்டியுள்ள மரத்தில் ஒருவர் பிணமாக தொங்கினார்.

இன்று காலை வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதை பார்த்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தூக்கில் பிணமாக தொங்கியவர் ஆரல்வாய்மொழி குருசடி பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் (வயது 50) கொத்தனார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பவுல்ராஜ் எதற்கு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட பவுல்ராஜிக்கு ஜெயமதி பாய் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com