குளச்சலில் அத்துமீறி மீன்பிடித்த விசைபடகுகளில் பறிமுதல் செய்த மீன்கள் ஏலம்

பணம் அரசு கணக்கில் சேர்ப்புதமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
குளச்சல் அரபிக்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்.
குளச்சல் அரபிக்கடலில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com