வெள்ளிச்சந்தை அருகே மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவை சேர்ந்தவர் பனி பிச்சை (வயது 65). இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் பனி பிச்சை சோகத்தில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று பனி பிச்சை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பனி பிச்சை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பனி பிச்சையின் மகள் டெல்பின் சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com