கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்

நடிகர் யோகி பாபு ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் சிக்கி திணறினார்.அவரது மெய்க்காப்பாளர்கள் ரசிகர்களிடம் இருந்து அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர்.
நடிகர் யோகிபாபு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்  தரிசனம் செய்துவிட்டு வந்தபோது எடுத்த படம் 
நடிகர் யோகிபாபு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்தபோது எடுத்த படம் 
Published on

கன்னியாகுமரி:

நடிகர் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அவர்அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்து அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் நடிகர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த வினாயகர் சன்னதி, ஸ்ரீ பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

நடிகர் யோகிபாபு சாமி கும்பிட வந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டு அவருடன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்பியும் எடுத்து கொண்டனர்.

இதனால் நடிகர் யோகி பாபு ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் சிக்கி திணறினார். உடனே அவருடன் வந்த அவரது மெய்க்காப்பாளர்கள் ரசிகர்களிடம் இருந்து அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com