கன்னியாகுமரி குகநாதீஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம்

கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு நடந்தது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் குகநாதீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையான இன்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 6.30மணிக்கு அபிஷேகமும் 8மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

பின்னர் காலை 10.30 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு அலங்கார தீபாராதனைநடந்தது.

பின்னர் மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3முறை வலம் வரும்நிகழ்ச்சியும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடக்கிறது.பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப் பிரகாரத்தை சுற்றி 3முறை சங்குஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம் வரசெய்கின்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப் படுகி றது. இதற்கான ஏற்பா டுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com