ஆசாரிபள்ளம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்

கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
குழந்தையுடன் கவிதா
குழந்தையுடன் கவிதா
Published on

கன்னியாகுமரி:

ஆசாரிபள்ளம் அருகே உள்ள பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் கவிதா (வயது 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கிருஷ்ணகுமார் தற்போது ஊரில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக கணவன் - மனைவிக் கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதையடுத்து கவிதா தனது தாயார் வீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிதா தனது 6 வயது மகளுடன் திடீரென மாயமானார்.

கவிதாவின் பெற்றோர் மற்றும் கணவர் கிருஷ்ண குமார் ஆகியோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் கவிதா கிடைக்கவில்லை.

இதையடுத்து கவிதா வின் தாயார் பார்வதி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரில் மாயமான மகள் மற்றும் பேத்தியை கண்டு பிடித்து தருமாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மாயமான கவிதாவின் செல்போன் உதவியுடன் அவரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com