ராஜாக்கமங்கலத்தில் வீட்டில் திடீர் தீ விபத்து

போலீசார் விசாரணையில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.பொதுமக்கள் அவசரம் அவசரமாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்
தீப்பிடித்து எரிந்த வீட்டை படத்தில் காணலாம்.
தீப்பிடித்து எரிந்த வீட்டை படத்தில் காணலாம்.
Published on

கன்னியாகுமாரி:

ராஜாக்கமங்கலம் துறை சகாய மாதா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவர் தன்னுடைய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை இவர் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டார். நண்பகல் 1 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

பின்னர் சசிகுமார் வந்த பிறகு எரிந்த வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் மின் கசிவால் வீடு தீப்பிடித்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com