கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதிய சொகுசு கார்

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 வாலிபர்கள்கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை
வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதி நின்ற காரை படத்தில் காணலாம்.
வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதி நின்ற காரை படத்தில் காணலாம்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில்இருந்த 5 வாலிபர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றிய சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கன்னியாகுமரிஅருகே உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதில்இருந்த 5 வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பிய போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதியது.விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த அந்த 5 வாலிபர்கள் மது போதையில் இருந்ததால் போலீசாருக்கு பயந்து காரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர்.

இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியின்அருகில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் இருந்தகண்காணிப்பு கேமராவில்விபத்துநடந்தது தெளிவாக பதிவாகி உள்ள து. அந்த சி.சி.டி.வி.காட்சி கள்சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com