கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே 220 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கடந்த 28ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நவீன்குமார் (வயது 25), சேதுபதி (22), நாட்ராயன் (48), முருகன் (எ) பூசாரி முருகன் (55) ஆகிய 4 பேரும் 220 கிலோ கஞ்சாவுடன் சிக்கினர்.

போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் மீதான குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விசாகன் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீசார் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com