கடையநல்லூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் பஜார் சாலையில் உள்ள துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது. 7-வது நாளான நேற்று கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெரிய தெரு, புதுத்தெரு, பஜார்ரோடு, தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்கள் வழியாக யானை மீது பச்சை களை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து சந்தனக் கூடும் நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மவுலதுசரீப் ஓதி நேர்ச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் பசுலுதீன், தர்கா பரம்பரை ஹக்தார் அனீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com