கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் - வருகிற 19-ந்தேதி நடக்கிறது

கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் வரும் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும்.
உடையார் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
உடையார் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
Published on

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் ஆலயம். சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பழமையும் புராணச் சிறப்பு கொண்டதாகும்.

அகஸ்தியரால் வழிபடப் பட்ட பெருமையும் உடைய ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு வருகிற 19-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

வெகு காலங்களுக்குப் பின்பு தற்போது தான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான கால் நாட்டுதல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

100-க்கும் மேற்பட்டோர் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடையார் சாம்பியன்ஸ் கிளப் நண்பர்கள் மற்றும் கீழக்கடையம் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com