உளுந்தூர்பேட்டையில் பெண் தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்த நீதிபதிகள்

நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர்.
உளுந்தூர்பேட்டையில் பெண் தூய்மை பணியாளருக்கு நீதிபதிகள் பாத பூஜை செய்தனர்.
உளுந்தூர்பேட்டையில் பெண் தூய்மை பணியாளருக்கு நீதிபதிகள் பாத பூஜை செய்தனர்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர் சிறப்பு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலாளர் திலீப் வரவேற்பு உரையாற்றினார். நகராட்சி ஆணையர் இளவரசன்,வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிபதி விக்னேஷ் பிரபு ஆகியோர் துப்புரவு முகாமை தொடக்கி வைத்தனர்.

நீதிபதிகள் ஸ்ரீராம், விக்னேஷ் பிரபு ஆகியோர் மூத்த பெண் தூய்மை பணியாளர் உமாபதி என்பவரை அமர வைத்து அவருடைய கால்களை கழுவி பொட்டு வைத்து பாத பூஜை செய்து தூய்மைக்கு முழு காரணமாக உள்ள உங்களை போன்ற தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர். முன்னதாக தூய்மை பணியின் அவசியம் குறித்து உறுதிமொழி அனைவரும் ஏற்றுக் கொண்டினர். முகாமில் அரசு வக்கீல்கள் வெங்கடேசன், இளமுருகன், ஜான்சி ராணி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com