ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்

நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்
Published on

திருச்சி:

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார், மூலவர், பெரிய பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com