திண்டுக்கல்லில் மில் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

மில் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை போனதுபுகாரின் பேரில் கைரேசை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் என்.எஸ்.நகர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று தனது தாயாரை சந்தித்துவிட்டு பின்னர் இரவு வேலைக்கு மணிகண்டன் சென்றுவிட்டார்.

இன்று காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இைத பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேசை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

புகார் அளித்த மணிகண்டன் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com