தூத்துக்குடியில் மூதாட்டி வீட்டில் நகை-பணம் கொள்ளை

கணவர் இறந்து விட்டதால் கட்டித்தங்கம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
தூத்துக்குடியில் மூதாட்டி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் கட்டித்தங்கம் (வயது 77). இவருக்கு 3 மகன்கள். அனைவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

நகை-பணம் கொள்ளை

கணவர் இறந்து விட்டதால் கட்டித்தங்கம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் உடனடியாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர்.

அப்போது பீரோவில் இருந்த 2½ பவுன் நகைகள் மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com