திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அரசு கண்டக்டரை தாக்கிய போதை டிரைவரிடம் விசாரணை

பஸ் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது பின் இருக்கையில் அரசு பஸ் டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தார்.குடிபோதையில் இருந்த டிரைவர் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ்நிலை யத்தில் இன்று காலை நத்தம் ரேக்கில் காரைக்குடி செல்வதற்காக அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக செல்வம் என்பவரும், கண்டக்டராக குருசாமி என்பவரும் இருந்தனர். பஸ் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது பின் இருக்கையில் அரசு பஸ் டிரைவரான சரவணன் என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்டெக்டர் குருசாமி பஸ் புறப்பட உள்ளதால் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் கண்டக்டர் குருசாமியை பயங்கரமாக தாக்கினார். மேலும் இதை தடுக்க வந்த பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சரவணன் தாக்கியதில் குருசாமியின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. உடனே அங்கிருந்த பணிமனை அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காமல் சரவணன் அவரை விரட்டிச் சென்று தாக்க முயன்றார். இதனால் பஸ்நிலையத்தில் பரபர ப்பான சூழல் உருவானது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து சரவணனை விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். அவர் குடிபோதையில் இருந்ததால் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரி வித்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com